Happy Clients
Projects
Hours Of working
Hard Workers
ஐந்தாண்டுகள் வெற்றியோடு நட்ட விதை இன்று மரமாகி ஒரு புதிய கிளை ஆரம்பிக்கும் அளவுக்கு நாம் பயணித்து கொண்டு இருக்கிறோம். அனைத்தும் சாத்தியமாக அமைய எங்களோடு துணை நிற்கும் இறைவனுக்கு முதற்கண் நன்றி. என்கூட துணைநிற்கும் என்னுடைய நட்பு ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கோடி நன்றிகள். எங்களுடைய வளர்ச்சியின் மூலை கற்களான வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த நன்றிகள். Apps lanka நிறுவனம் மூலம் இன்று ஊழியர்கள், மாணவர்கள், வாடிக்கையாளர்கள் அடைய கூடிய பலன்களை நினைத்து உண்மையில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நேரம் பார்க்காமல், சுமை நோக்காமல் எந்த நேரத்திலும் வாடிக்கையாளர்களுக்கு பதில் தரக்கூடிய Appslankans களை கொண்டு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. எமது நிறுவனம் இன்னும் பல பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வடகிழக்கு பகுதியில் ஒரு அசைக்க முடியாத தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் மற்றும் ஆசையும் கூட. அடுத்த 2 வருடங்களில் குறைந்தது 20 பேர் வரையான ஊழியர்களை கொண்டு பெரும் விருட்சமாக எமது நிறுவனம் வளர்ச்சி பெற வேண்டும். மீண்டும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
2 years ago