இணைய பாவனை அதிகமாகி வரும் இந்த காலகட்டத்தில், இணையம் சார் அல்லது கையடக்க தொலைபேசி சார் மென்பொருள்களை உற்பத்தி செய்வது என்பது இன்றியமையாத ஒரு தேவையாக உள்ளது
நீங்கள் உங்களுடைய எதிர்காலம் பற்றிய கவலையோடு இருந்தால் அதாவது எந்த துறையை தேர்வு செய்வது என்பதில் குழப்பங்கள் இருந்தால் எந்தவித ஐயமும் இன்றி நீங்கள் மென்பொருள் வடிவமைப்பினை தேர்வு செய்யலாம்.
ஏன் மென்பொருள் துறையை தேர்வு செய்ய வேண்டும்?
- பெருகிவரும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு வேலை வாய்ப்புகள்.
- அதிக சம்பளம் உள்ள ஒரு துறை.
- உலகத்தில் எந்த மூலை முடுக்கில் இருந்தும் ஒரு மடிக் கணனி மற்றும் இணையத்துடன் இருந்தபடி வேலை செய்யும் வாய்ப்பு
- புதிய புதிய அனுபவங்களும் அறிவு வளர்ச்சியும்.
- சமூக அந்தஸ்து ஒரு படி மேல் இருக்க ஒரு வாய்ப்பு
- ரோபோட் துறைகளில் கூட வேலை செய்யும் வாய்ப்புகள்.
- தொழிற்சாலை இயந்திரங்களை கையாளும் சந்தர்ப்பம்
என புதிய புதிய வித்தியாசமான துறைகளில் உங்கள் திறமையை வெளிக் கொண்டு வர இதுவே இரு சிறப்பான பகுதி என்பதில் சந்தேகம் இல்லை.
எந்த கணனி மொழிகளை படிக்க வேண்டும் ?
இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் நீங்கள் மொழிகளை படிக்க வேண்டியது இல்லை. இன்று எந்த ஒரு கணனி மொழி அறிவு இல்லாமலும் கணனி சார் வேலைகளை செய்வது சாதாரணம்.
உதாரணம் தேவையெனில
போன்ற இணையதளங்கள் உள்ளது. இந்த தளங்களை பயன்படுத்தி இணைய தளங்களை வடிவமைப்பது என்பது கடினமான ஒரு விடயம் இல்லை.
இவை மட்டும் போதுமா? வேறு என்ன தெரிந்து இருக்க வேண்டும்?
உலகில் வழக்கு என்றால் அது புதிய கண்டு பிடிப்புகள் அல்லது புதிய உருவாக்கங்களுக்கு இருக்கும் சிறப்பு தானே, நீங்க இன்னும் அதிகமான நேரத்தை செலவழித்து ஒரு கணனி மொழியை விளங்கி கற்றுக் கொள்வது இன்னும் சிறப்பானது.
சில பிரபல்யமான கணனி மொழிகளை பார்க்கலாம்.
- ஜாவா – JAVA
- ஜாவா ஸ்கிரிப்ட் – JAVASCRIPT
- சி ஷார்ப் – C#
- சி பியூ பியூ C++
- பி. எச். பி PHP
- சி – C
- பைதொன் -Python
- பேர்ல் – Perl
- ரூபி – Ruby
- ஸ்விப்ட் – Swift
- கொட்லின் – Kotlin
என்று பல மொழிகள் உள்ளது, இதில் ஜாவா என்பதும் ஜாவா ஸ்கிரிப்ட் என்பதும் முற்றிலும் வேறுபட்ட மொழிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கொட்லின் மற்றும் ஜாவா என்பவை ஆண்ட்ராய்டு துறையில் பயன்படுத்தபடுகின்ற மொழிகள்
ஸ்விப்ட் என்பது ஆப்பிள் மென்பொருள்கள் செய்யப் பயன்படுத்துகின்ற மொழியாகும்.
சி ஷார்ப் என்பது விண்டோஸ் மென்பொருள்கள் செய்யப் பயன்படும்.
இதிலும் கையடக்க தொலைபேசிக்கு ஆப்ஸ் செய்வது என்பது இன்றைய காலங்களில் அதிகமாக பேசப் படிக்கின்ற ஒரு விடயம்.
ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் விண்டோஸ் மென்பொருள்களை (ஆப்ஸ்) வடிவமைப்புக்கு இந்த மொழிகளில் சிலவற்றை படித்துக் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மொழிகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட சில FRAMEWORKs பற்றி பார்க்கலாம்
FRAMEWORK என்பது பற்றிய வரைவிலக்கணம் சொல்வதைவிட சில உதாரணங்களை தருகிறேன்.
-
- Laravel – PHP
- NodeJs – Javascript
- Jquery – Javascript
- AngularJs – Javascript
- VueJS
- ReactJs
- Bootstrap
இப்படிப் பல FRAMEWORKS உள்ளது. இவை அனைத்தும் மென்பொருள் வடிவமைப்பை இலகுபடுத்த உருவாக்கப்பட்ட மொழிகள் என்று கூடச் சொல்லலாம்.
மேலும் பல தகவலுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
Leave a Reply