உண்மையில் இணையதளம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
பலர் பலவழிகளை கூறி உங்களை குழப்பி இருக்கலாம், உண்மையில் இணையதளம் மூலம் பணம் சம்பாதிப்பது சாத்தியமா என்று கேட்டால் அதற்குப் பதில் ஆம், சம்பாதிக்கலாம் என்பது தான்.
உண்மையில் இது பலர் கூறுவது போல மிகவும் இலகுவான ஒரு விடயம் இல்லை, நீங்கள் சில காணொளிகளை அல்லது பத்திரிகைகளை பார்த்து ஆச்சரிய கணைகளை உங்கள் மூளைக்குள் செலுத்தியிருக்க கூடும்.
இந்த உலகில் பணம் என்பது ஒரு ஆபத்தான, அழகான விடயம் என்று கூறலாம். அப்படிப்பட்ட ஒரு விஷயம் மிக இலகுவில் உங்களை அடைந்து விடாது.
இணையம் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு சாதாரண மற்ற வேலைகளை போல ஒரு விடயம் தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது நீங்கள் இணையத்தில் பணம் பெற போதிய அளவு நேரத்தை செலவு செய்ய வேண்டும். இல்லையெனில் பணம் என்பது வெறும் கனவு தான்.
அதிலும் தமிழ் மொழி சார் இணையங்களை வைத்து பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விடயம். அதற்கு கூகுளை நாங்கள் ஒருமுறை ஆசை தீர திட்டிவிடலாம். கூகிள் தமிழ் மொழிக்கு தன்னுடைய அட் சென்ஸ் – Adsense வசதியை இன்னும் வழங்க இல்லை என்பது தான் உண்மை. அதைவிட கூகிள் விளம்பரச் சந்தையில் எங்களுடைய மொழி இடம்பிடிக்காமல் இருக்க எங்களுடைய மக்கள் கூட ஒரு காரணம் தான் (நாம் தான் இணையத்தில் பொருட்களை வாங்குவதே இல்லையே!!)
ஏன் என்று தானே யோசிக்கிறீர்கள், அதை அறிய முதல் கூகுளை விளம்பரச் சந்தை எப்படி செயல்படுகிறது என்று பார்க்கலாம்.
அதாவது கூகிள் தனது அட் சென்ஸ் – Adsense மூலம் விளம்பரம் செய்ய ஆசைப்படுகின்ற குட்டி முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஒரு குறிப்பிட வரையறை அடிப்படையில் ஒரு தொகை பணத்தை பெற்றுக் கொள்கிறது. உதாரணமாக ஒரு மதம் 1000 ரூபாய்கள் என்று வைத்துக் கொள்வோம்.
இந்த பெறுமதிக்கு கூகிள் இணைய தளங்களில், அல்லது யூடுபே மூலம் குறிப்பாக யார் யார் எல்லாம் அந்த விளம்பரம் சார்ந்த விடயங்களை தேடுகிறார்களோ அவர்களுக்கு அந்த விளம்பரத்தை பார்வையிட செய்து தன்னுடைய விளம்பர தாராருக்கு அவருடைய வியாபாரம் பெறுக உதவி செய்யும்.

இங்கே அருகில் நீங்கள் பார்ப்பது ஒரு விளம்பர மாதிரி.
இதை போன்று பல விளம்பரங்களை நீங்கள் பார்த்து இருக்கலாம். இதில் ஒரு சிறப்பம்சம் என்ன தெரியுமா? இந்த விளம்பரம் யாருடைய இணைய தளத்தில் அல்லது யூடுப் சேனல் – Youtube Channel மூலம் பார்வைக்கு விடப்படுகிறதோ அந்த இணையதளத்துக்கு அல்லது யூடுப் சேனல்கு சொந்தமானவருக்கு ஒரு குறுகிய தொகை பணத்தை கூகிள் செலுத்தும். இந்த முறையை B2B – Business to Business
அதாவது நீயும் சம்பாதி நானும் சம்பாதிக்கிறேன் நமக்குள்ள எதுக்கு வீண் வம்பு என்பது தான்
இதன் அழகான விளக்கம்.
இப்பொழுது உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும். இனி அதிகமான நம்பிக்கையான பணம் சம்பாதிக்கும் வழிகளை பார்ப்போம்.
- Youtube videos.
- Android, IOS, Windows Applications
- இணைய தளங்கள்
- Blogs
- இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்தல்
- குறிப்பிட சில இணைய தளங்களை பார்வையிடுவது
- வீட்டில் இருந்தபடி சில நிறுவங்களுக்கு பணி புரிவது.

என்று பலவிதமான வழிகள் இருக்குறது. இதிலும் யூடுபே – Youtube மூலம் பணம் சம்பாதிப்பது தமிழ் மொழி சார்ந்தவர்களுக்கு மிகவும் இலகுவான விடயம் என்று சொல்லலாம்.
அதுவும் நீங்கள் நினைப்பது போல இலகுவான விடயம் இல்லை. நீங்கள் இஷ்டப்பட்டு பலன் எதிர்பாராமல் உழைக்கும் பட்ஷத்தில் உங்களுக்கு அதிசயங்கள் காத்திருக்குறது என்பது நிச்சயம்.
நீங்கள் சில வேளைகளில், ஏன் இப்படி எல்லாம் வீடியோ செய்கிறார்கள்! என்று நினைத்திருக்க கூடும், பொதுவாக பெரும்பாலாக அந்த காணொளிகள் பின்னால் பணம் ஒளிந்து இருக்கிறது என்பது தான் உண்மை.
அடுத்த கட்டுரையில் பணம் சம்பாதிப்பது பற்றிய மேலும் பல தகவல்களில் உங்களை சந்திக்கிறேன். குறிப்பாக யூடுப் மூலம் எப்படி சம்பாதிக்கலாம் என்று பார்க்கலாம்.
Leave a Reply